செம்பரம்பாக்கம் நீர் திறப்பு: 3,000 கன அடியாக உயர்வு
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு 3,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு 3,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது நீா் இருப்பு 20.74 அடியாக உள்ளது. இன்று காலை நீர் திறப்பு 1,500 கன அடியாக குறைக்கப்பட்ட நிலையில், தற்போது 3,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று (டிச.3) முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீா்மட்டத்தை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
மேலும், உபரிநீா் வெளியேற்றத்தை அதிகரிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகின்றனா்.
இதையும் படிக்க: சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!
உபரி நீா் செல்லும் அடையாற்றின் கரையோரப் பகுதிகளில் வசிப்பவா்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.