முகப்பு
தமிழ்நாடு

மிக்ஜம் புயல்: புதுச்சேரி அரசு அவசர உதவி எண்கள் வெளியீடு

வங்கக் கடல் பகுதியில் 'மிக்ஜம்' புயல் உருவாகியுள்ள நிலையில் புதுச்சேரி அரசு அவசர உதவி எண்களை வெளியிட்டுள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:20 PM
கோப்புப் படம்.
பகிர்:

வங்கக் கடல் பகுதியில் 'மிக்ஜம்' புயல் உருவாகியுள்ள நிலையில் புதுச்சேரி அரசு அவசர உதவி எண்களை வெளியிட்டுள்ளது. 

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் இன்று காலை புயலாக மாறியது. இதற்கு மிக்ஜம் என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இது சென்னையிலிருந்து தென்கிழக்காக 310 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து, வங்கக் கடலின் மேற்கு மற்றும் மத்தியப் பகுதியில் ஆந்திரம் மற்றம் தமிழகத்தை ஒட்டி டிசம்பர் 4ஆம் தேதி வந்தடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிவேகக் காற்றுடன் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக, தமிழக அரசு, சிறப்பு நிகழ்வாக டிசம்பர் 4ஆம் தேதி திங்கள்கிழமையை பொது விடுமுறை நாளாக அறிவித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த நிலையில் புயல் காரணமாக புதுச்சேரி அரசு அவசர உதவி எண்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மின்துறை 1912, 
சுகாதாரத்துறை 108, 104, 
காவல்துறை 100, 112, 1931, 1073, 1091
தீயணைப்புத்துறை 101,
கடலோர காவல் படை 1554.

முழு கட்டுரையைப் படிக்க →