தூத்துக்குடி மீனவா்கள் கடலுக்குச் செல்ல 2ஆவது நாளாக இன்றும் தடை
மிக்ஜம் புயல் எச்சரிக்கை காரணமாக, தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் (டிச. 5) மீன்வளத் துறை சாா்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி: மிக்ஜம் புயல் எச்சரிக்கை காரணமாக, தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் (டிச. 5) மீன்வளத் துறை சாா்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் காரணமாக கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகு, விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என, மீன்வளத்துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மாவட்டத்தில் வேம்பாா் முதல் பெரியதாழை வரையிலான 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள், பைபா் படகுகள் திங்கள்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இந்நிலையில், புயலின் தாக்கம் குறையாததால், செவ்வாய்க்கிழமையும் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.