கோப்புப்படம் 
தமிழ்நாடு

மிக்ஜம் புயல் எதிரொலி : 6 ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

DIN

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜம்’ புயல் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும்-மசூலிப்பட்டினத்துக்கும் இடையே செவ்வாய்க்கிழமை (டிச. 5) கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் காரணமாக சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை காலை வரை வட தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. 32 இடங்களில் பலத்த மழையும் இரண்டு இடங்களில் மிக பலத்த மழையும் பெய்தது.  அதிகபட்சமாக திருவள்ளூா் மாவட்டம் பள்ளிப்பட்டில் 150 மி.மீ. மழை பதிவானது.

மேலும், திருவள்ளூா், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று, திங்கள்கிழமை (டிச. 4) காலை  வரை மிக பலத்த மழையும், ராணிப்பேட்டை, வேலூா், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும்  என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்தநிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  

வண்டி எண்.12007,  சென்னை  சென்ட்ரல் - மைசூரு சதாப்தி விரைவு ரயில், வண்டி எண்.12675,  சென்னை சென்ட்ரல் - கோவை விரைவு ரயில், வண்டி எண்.12243,சென்னை  சென்ட்ரல் - கோவை சதாப்தி  விரைவு ரயில், வண்டி எண்.22625, சென்னை சென்ட்ரல் - பெங்களூரு ஏசி டபுள் டெக்கர் விரைவு ரயில், வண்டி எண்.12639, சென்னை சென்ட்ரல் - பிருந்தாவன் விரைவு ரயில்,  வண்டி எண்.16057, சென்னை சென்ட்ரல் - திருப்பதி சப்தகிரி விரைவு ரயில் ஆகிய 6 ரயில்கள் இன்று (டிச.4) ரத்து  செய்யப்பட்டுள்ளன.

மேலும், ரத்து செய்யப்பட்ட ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு கட்டணம் திருப்பி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் வீரர்களின் பாராட்டு மழையில் இந்திய அணி!

பழங்குடியின மக்களின் பாதுகாப்பு நிழல் ‘ஷிபு சோரன்!’ -ஜார்க்கண்ட் முதல்வர் உருக்கம்!

எஸ்எஸ்சி தேர்வர்கள் போராட்டம்: தேர்வு நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்: சு. வெங்கடேசன் எம்.பி.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் சரிந்து ரூ.87.70 ஆக நிறைவு!

மாசாணி அம்மன் கோவிலில் விமலின் புதிய படப் பூஜை!

SCROLL FOR NEXT