கோப்புப்படம் 
தமிழ்நாடு

ரேவந்த் ரெட்டிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

தெலங்கானா முதல்வராக இன்று பதவியேற்கவுள்ள ரேவந்த் ரெட்டிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

DIN

தெலங்கானா முதல்வராக இன்று பதவியேற்கவுள்ள ரேவந்த் ரெட்டிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தெலங்கானா சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றது. இதையடுத்து அக்கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட ரேவந்த் ரெட்டி, மாநில முதல்வராக இன்று பதவியேற்க உள்ளாா். தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மல்லிகாா்ஜுன காா்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில் தெலங்கானா முதல்வராக பதவியேற்கவுள்ள ரேவந்த் ரெட்டியை தொலைபேசியில் தொடர்புகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அதில், "தெலங்கானா முதல்வராக பதவியேற்கவுள்ள ரேவந்த் ரெட்டிக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அவரது பதவிக்காலம் வெற்றிகரமாக அமைந்து நல்ல தாக்கத்தை ஏற்படுத்திட வாழ்த்துகிறேன்" என முதல்வர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT