கோப்புப்படம் 
தமிழ்நாடு

வண்டலூர் பூங்கா இன்று(டிச. 8) முதல் திறப்பு!

புயல் பாதிப்புக்குப் பின் வண்டலூர்  உயிரியல் பூங்கா இன்று(டிச. 8) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 

DIN

புயல் பாதிப்புக்குப் பின் வண்டலூர்  உயிரியல் பூங்கா இன்று(டிச. 8) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 

மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிச. 3, 4 ஆம் தேதிகளில் பெய்த தொடர் கனமழை, கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் புயலால் வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில் இருந்த நீர் பூங்காவிற்குள் சென்றது. இதனால் பூங்கா முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்தது. மேலும் 30-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. 

இதையடுத்து வண்டலூர் பூங்கா மூடப்பட்டு சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன. பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று(டிச. 8) முதல் வண்டலூர்  உயிரியல் பூங்கா செயல்படும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்தது. அதனடிப்படையில் பொதுமக்களின் பார்வைக்காக வண்டலூர் பூங்கா இன்று திறக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசத்தில் டெங்கு பரவல்! 24 மணிநேரத்தில் புதியதாக 1,147 பாதிப்புகள் உறுதி!

இரண்டு நாள் சுற்றுப்பயணம்! வேலூரில் துணை முதல்வர் நடைபயிற்சி!

பிளஸ் 2 கணக்குப்பதிவியல் தேர்வு: முதல்முறையாக கால்குலேட்டர் அனுமதி!

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! முதல்வர் ஸ்டாலின்

கமல் பிறந்த நாளில் மறுவெளியீடாகும் 2 திரைப்படங்கள்!

SCROLL FOR NEXT