எரிவாயு லோடு லாரிகள் மீது சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் எரிவாயு வால்வுகள் உடைந்து லாரியில் இருந்து கசியும் எரிவாயு. 
தமிழ்நாடு

லாரி மீது சுவர் விழுந்து எரிவாயு கசிந்ததால் பரபரப்பு!

கோவை, திருமலையாம்பாளையம் அருகே சமையல் எரிவாயுவுடன் நின்றிருந்த லாரி மீது சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து எரிவாயு கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

DIN

கோவை: கோவை, திருமலையாம்பாளையம் அருகே சமையல் எரிவாயுவுடன் நின்றிருந்த லாரி மீது சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து எரிவாயு கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கேரளம் மாநிலம் கொச்சியில் இருந்து சமையல் எரிவாயு ஏற்றிக்கொண்டு கோவை கணபதியில் உள்ள எரிவாயு நிறுவனத்திற்கு வந்த லாரி நள்ளிவில் கோவை திருமலையாம்பாளையம் பகுதியில் உள்ள லாரி நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

அப்போது கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில் திடீரென சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் அங்கிருந்த சுற்றுச் சுவர் ஒன்று இடிந்து எரிவாயு லோடுடன் இருந்த லாரிகள் மீது விழுந்துள்ளது. இதில் எரிவாயு வால்வுகள் உடைந்து லாரியில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து லாரியில் ஏற்பட்ட கசிவை நிறுத்த எரிவாயு நிறுவன ஊழியர்கள் விரைந்தனர். 

மேலும் அங்கு தீயணைப்பு துறையினரும் குவிக்கப்பட்டனர். 

லாரிகளை சுற்றி சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவுக்கு தீக்குச்சி, செல்போன், டார்ச் லைட் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தி போலீசார் கண்காணித்து வருகின்றனர். 

மேலும் பாலக்காடு சாலையில் வாகனம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு வாகனங்கள் வேறு பாதையில் மாற்றி விடப்பட்டுள்ளது. 

முதல் கட்டமாக இரண்டு வால்வுகள் அடைக்கப்பட்ட நிலையில் மூன்றாவது வால்வை சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அங்கன்வாடி பணியாளா் வீட்டில் 3 சவரன் நகை, ரொக்கம் திருட்டு

கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

வாழ்க்கைதான் யோசிக்கவே முடியாத சினிமா!

சட்ட விரோதமாக குட்கா விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’

தீயில் கருகிய காா்: உயிா் தப்பிய 3 போ்

SCROLL FOR NEXT