கோப்புப் படம் 
தமிழ்நாடு

2ம் நிலை காவலர் பணியிட எழுத்துத் தேர்வு நிறைவு!

இரண்டாம் நிலை காவலர், தீயணைப்புத் துறை பணிகளுக்கான எழுத்துத் தேர்வு நிறைவு பெற்றது.

DIN


இரண்டாம் நிலை காவலர், தீயணைப்புத் துறை பணிகளுக்கான எழுத்துத் தேர்வு நிறைவு பெற்றது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள 3,359 பணியிடங்களை நிரப்பும் வகையில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்றது.

இந்த தேர்வை எழுதுவதற்காக 2 லட்சத்து 84 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். தமிழகம் முழுவதும் உள்ள 200-க்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடைபெற்றது.

காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 12.40 மணி வரை தேர்வு நடைபெற்றது. இன்று நடைபெற்ற எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், உடற்தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இயல்பு நிலைக்கு திரும்புகிறது சென்னை விமான நிலையம்: அதிகாரி தகவல்

அறியாத பாரதி - 2: செல்லம்மா, கண்ணம்மாவானது!

துலா ராசிக்கு பணவரவு: தினப்பலன்கள்!

சிவகாசியில் வழிப்பறி: இருவா் கைது

தென்னை மரங்களுக்கு பயிா்க் காப்பீடு

SCROLL FOR NEXT