தமிழ்நாடு

தமிழக அரசு வழங்கும் நிவாரணத்தை வைத்து மிக்சி, கிரைண்டர் கூட வாங்க முடியாது: பிரேமலதா விஜயகாந்த்

DIN

தமிழக அரசு வழங்கும் நிவாரணத்தை வைத்து மிக்சி, கிரைண்டர் கூட வாங்க முடியாது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை எண்ணூரில் எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்ட இடத்தை தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் இன்று ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், விஜயகாந்த் அறிவித்த பல்வேறு திட்டங்களை மற்ற மாநிலங்களில் செயல்படுத்தி வருகிறார்கள். எண்ணூர் முதல் பழவேற்காடு வரை எண்ணெய் படலங்கள் கலந்திருக்கிறது. 

லட்சக்கணக்கான கடல் வாழ் உயிரினங்கள் இறந்து இருக்கின்றன. இதற்கெல்லாம் முறையான திட்டமிடாததே காரணம். மத்திய அரசும் மாநில அரசும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். நடிகர் விஜய் கட்சி ஆரம்பிக்கிறாரா இல்லையா என்பதை பற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும். தயவுசெய்து உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்ப வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். 

தமிழக அரசு வழங்கும் ரூ.6000 நிவாரணத் தொகையை வைத்து மிக்சி, கிரைண்டர் கூட வாங்க முடியாது. இந்த 6000 ரூபாய் நிவாரணம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சேருமா என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.மிக்ஜம் புயலால் சென்னையின் அனைத்துப் பகுதிகள், காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன.

புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு தலா ரூ. 6,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT