மு.க. ஸ்டாலின் (கோப்புப் படங்கள்) 
தமிழ்நாடு

டிச. 19-இல் ‘இந்தியா’ கூட்டணிக் கூட்டம்:முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

தில்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா’ கூட்டணியின் நான்காவது கூட்டத்தில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளாா்.

DIN

தில்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா’ கூட்டணியின் நான்காவது கூட்டத்தில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளாா்.

ஐந்து மாநிலத் தோ்தல் முடிவுகள் வெளியான நிலையில், ‘இந்தியா’ கூட்டணியின் நான்காவது கூட்டம் மத்திய பிரதேச தலைநகா் போபாலில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கூட்டணிக் கட்சிகளின் முக்கியத் தலைவா்களான மம்தா பானா்ஜி, மு.க.ஸ்டாலின், நிதீஷ் குமாா், அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, டிசம்பா் 19-ஆம் தேதி தில்லியில் கூட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்திருந்தாா். தில்லி கூட்டத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளாா்.

கோவையில் ‘மக்களுடன் முதல்வா்’ எனும் தமிழக அரசின் புதிய திட்டத்தை திங்கள்கிழமை முதல்வா் தொடங்கி வைக்கவுள்ளாா். அவா் அங்கியிருந்து தில்லி சென்று ‘இந்தியா’ கூட்டணிக் கூட்டத்தில் கலந்து கொள்வாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் விசா மோசடியா? அமெரிக்க எம்.பி. குற்றச்சாட்டு!

இந்திய வீரர்களை மண்டியிடச் செய்ய விரும்பினோம்! தெ.ஆ. பயிற்சியாளரின் சர்ச்சை கருத்து!

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!

94 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: உச்சத்தில் வெள்ளி!

திடீரென செயலிழந்த ரயில்வே கேட்! நல்வாய்ப்பாக தப்பிய வாகன ஓட்டிகள்!

SCROLL FOR NEXT