முகப்பு
தமிழ்நாடு

4 மாவட்டங்களுக்கு இன்று பொதுவிடுமுறை!

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வரும் பொதுவிடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 18 டிசம்பர் 2023, 8:48 am IST
பகிர்:

தொடர் கனமழை காரணமாக 4 மாவட்டங்களுக்கு இன்று (டிச. 18) பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வரும் பொதுவிடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

4 மாவட்டங்களிலும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஏற்கெனவே விடுமுறை என அறிவிக்கப்பட்ட நிலையில், அரசு அலுவலகங்கள் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள நிலையில், அத்தியாவசியத் துறைகள் மட்டுமே செயல்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments