கோப்புப்படம் 
தமிழ்நாடு

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நாளை (டிச.19) பொது விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.

DIN

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நாளை (டிச.19) பொது விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை முதல் அதிகனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இரு மாவட்டங்களில் தொடரும் வெள்ளப் பாதிப்பு காரணமாக  பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், வங்கிகள், அரசு, தனியார் நிறுவனங்களுக்கு  நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பால் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கனமழை மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் குழந்தையுடன் தம்பதி காரில் கடத்தல்

பண மோசடி புகாா்: பெங்களுரில் ஒருவா் கைது

சுற்றுலாத்துறை விருதுகள் பெற செப்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

குற்றச் செயல்களில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது

SCROLL FOR NEXT