தமிழ்நாடு

தூத்துக்குடியில் 3வது நாளாக விமான சேவை ரத்து

DIN


சென்னை: வங்கக் கடலில் உருவான கீழடுக்கு சுழற்சி காரணமாக, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிகனமழை பதிவாகியுள்ளது.

இதனால், தூத்துக்குடியில் மூன்றாவது நாளாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு நாள்தோறும் 3 விமானங்கள் புறப்பட்டுச் சென்று திரும்பி வரும். ஆனால், கனமழை காரணமாக மூன்றாவது நாளாக இன்றும் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

வானிலை சீரானதும் விமான சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி செல்ல முன்பதிவு செய்திருந்த பயணிகள், மதுரை செல்லும் விமானங்களில் அனுப்பிவைக்கப்பட்டனர்.

இலங்கை அருகே நிலவி வரும் கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக பெய்த கனமழையால் மாவட்டங்கள் முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தென் தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

SCROLL FOR NEXT