தமிழ்நாடு

சேலம் பைத்தூர் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்: ஆட்சியர் உத்தரவு

சேலம் பைத்தூர் திமுக ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்கம் செய்து புதன்கிழமை(டிச.20) மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

DIN


சேலம்: சேலம் பைத்தூர் திமுக ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்கம் செய்து புதன்கிழமை(டிச.20) மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட பைத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த  கலைச்செல்வி சிவக்குமார் இருந்து வருகிறார்.

இந்த நிலையில்,கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி பகுதியில்  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடு செய்திருப்பதாகவும்,அதேபோல்  ஆட்டுக்கொட்டகை அமைப்பதில் முறைகேடு செய்திருப்பதாகவும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில்  சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் விசாரணை நடத்தப்பட்டதில் முறைகேடு செய்திருப்பது உறுதியானது.

இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வியை பதவி நீக்கம் செய்து புதன்கிழமை(டிச.20) மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டார்.

ஊராட்சி மன்ற தலைவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டின் பேரில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வியை பதவி நீக்கம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல்: காட்டாட்சிக்கு எதிராக பெண்கள் - பிரதமர் மோடி

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! | SIR | EC

SCROLL FOR NEXT