ஆளுநர் ஆா்.என்.ரவி 
தமிழ்நாடு

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் துறைகள்: ஆளுநர் ஒப்புதல்

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பொன்முடியின் துறைகளை ஒதுக்கீடு செய்ய ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

DIN

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பொன்முடியின் துறைகளை ஒதுக்கீடு செய்ய ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் அமைச்சர் பதவியை இழந்தார். அவர் வகித்து வந்த துறைகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

அதாவது, முன்னாள் அமைச்சர் பொன்முடி வகித்து வந்த  உயர்கல்வித் துறை மற்றும் அறிவியல் தொழில்நுட்ப துறைகளை இனி அமைச்சர் ராஜகண்ணப்பன் கவனிப்பார் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படுவது குறித்து ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் துறைகளை வழங்குவதற்கு ஆளுநர் ஆர்.என்.  ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர் கல்வி, அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ராஜகண்ணப்பனிடம் இருந்த கதர், கிராமத்தொழில் துறை அமைச்சர் ஆர். காந்திக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் நடக்கிறதா? அரசுத் திட்டங்கள் பெயரில் பண மோசடி!

“Karur பற்றிய கேள்விகளைத் தவிர்க்கலாம்!” செந்தில் பாலாஜி காட்டம்! | DMK | TVK | VIJAY

மோலிவுட்டிலிருந்து... அஸ்வதி!

சொந்த ஊரில் கிடா வெட்டி விருந்தளிந்த தனுஷ்!

டார்ஜிலிங்கில் நிலச்சரிவு: 7 பேர் பலி; பலர் மாயம்! - பிரதமர் மோடி இரங்கல்

SCROLL FOR NEXT