கோப்புப்படம் 
தமிழ்நாடு

தூத்துக்குடி-திருச்செந்தூர் பேருந்துகள் இன்றும் இயங்கவில்லை!

தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு இன்றும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு இன்றும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 17, 18 தேதிகளில் பெய்த வரலாறு காணாத கனமழை மற்றும் தாமிரவருணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பல்வேறு சாலைகளும், தண்டவாளங்களும், பாலங்களும் வெள்ளத்தில் சேதமடைந்தது.

இதனால் தென் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் ரயில் சேவை, பேருந்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.

மழை குறைந்து வெள்ள நீர் வடிந்தததை தொடர்ந்து, புதன்கிழமை அதிகாலை முதல் ரயில் மற்றும் பேருந்து சேவைகள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியது.

திருநெல்வேலியில் இருந்து ரயில்களும், பேருந்துகளும் 90 சதவிகிதத்துக்கு மேல் இயக்கப்பட்டு வருகின்றது.

தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி, மதுரை வழியாக செல்லக்கூடிய பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், திருச்செந்தூர் செல்லும் சாலையில் பாதிப்பு அதிகமாக இருப்பதால் அவ்வழித்தடத்தில் மட்டும் பேருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, திருச்செந்தூரில் சிக்கித் தவித்த பக்தர்களை மீட்டு கட்டணமில்லா பேருந்துகள் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு தமிழக அரசு புதன்கிழமை அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!

ரஷியாவுக்கே இந்த நிலையா? எரிபொருள் தட்டுப்பாடு!

மணிப்பூரில் புதிதாகத் தேர்தல் நடத்த வேண்டும்: காங்கிரஸ்

அமெரிக்கா வரி விதிப்பு: மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்-துரை.வைகோ

3 வெண்கல பதக்கங்களுடன் நிறைவு செய்த மனு பாக்கர்!

SCROLL FOR NEXT