தமிழ்நாடு

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தாயார் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தாயார் மறைவுக்கு, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

DIN


தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தாயார் மறைவுக்கு, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டும் தனது இரங்கலைத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 
தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரும் விருதுநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்‌ தாயார் அமராவதி அம்மாள் வயது மூப்பின் காரணமாக மறைவெய்திய செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன்.

அன்பின் திருவுருவான அன்னையை இழந்து தவிக்கும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கும் அவரது குடும்பத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று உருவாகிறது சென்யார் புயல்!

ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

விவசாய மின் இணைப்புக்கு ரூ. 7,000 லஞ்சம்: இளநிலை பொறியாளா் நண்பருடன் கைது

SCROLL FOR NEXT