திருச்சி: சார்ஜாவிலிருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ. ரூ.27.41 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் நகையை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா்.
சார்ஜாவிலிருந்து (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) சனிக்கிழமை நள்ளிரவு வந்த ஐஎக்ஸ் 614 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானப் பயணிகளையும், அவா்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவினா் சோதனையிட்டனா்.
இதில், ஒரு பயணி 432 கிராம் தங்கத்தை மலக்குடலுக்குள் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. ரூ.27.41 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.