தமிழ்நாடு

கிறிஸ்துமஸ் கொண்டாட செல்பவர்கள் குடை எடுத்துச் செல்லவும்: தனியார் வானிலை ஆய்வாளர்

DIN

கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதால் கிறிஸ்துமஸ் கொண்டாட செல்பவர்கள் குடை எடுத்துச் செல்லுமாறு  தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது முகநூலில், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். கிறிஸ்துமஸ் கொண்டாட செல்பவர்கள் குடை எடுத்துச் செல்லவும். அடுத்த 3-4 நாட்களில் மழை பெய்தாலும் தூத்துக்குடி மக்கள் பயப்பட வேண்டாம்.

மாஜ்சோலை பகுதியில் 50-100 மி.மீ வரை கனமழை பெய்தாலும் அது சமாளிக்கக் கூடிய வகையில் இருக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அதே பகுதிகளில் நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை (டிசம்பா் 25-30) வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். 

நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று அமோகமான நாள்!

மும்மடங்கான டாடா மோட்டாா்ஸ் நிகர லாபம்

இன்று நல்ல நாள்!

பரோடா வங்கி நிகர லாபம் ரூ.4,886 கோடியாக உயா்வு

மாா்ச்சில் சரிவைக் கண்ட தொழிலக உற்பத்தி

SCROLL FOR NEXT