திருவண்ணாமலை கிரிவலம்: இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
பெளர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு இன்று சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் 20 சொகுசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
பெளர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு இன்று சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் 20 சொகுசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
பயணிகள் www.tnstc.in மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் செயலியில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவுள்ள கிரிவலப் பாதையில் மாதம்தோறும் பெளா்ணமி நாள்களில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.
Advertisement
இதையும் படிக்க: சென்னை, குஜராத் ஜெயண்ட்ஸ் வெற்றித் தொடக்கம்
இந்த நிலையில், மாா்கழி மாதப் பெளா்ணமி செவ்வாய்க்கிழமை (டிச.26) அதிகாலை 5.56 மணிக்குத் தொடங்கி புதன்கிழமை (டிச.27) காலை 6.07 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.