கோப்புப்படம் 
தமிழ்நாடு

மாணவிகள் மீது ஆசிட் வீசிய வழக்கு: இளைஞருக்கு 22 ஆண்டுகள் சிறை 

மதுரையில் கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீசிய வழக்கில் கைதான சங்கர நாராயணனுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

DIN


மதுரையில் கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீசிய வழக்கில் கைதான சங்கர நாராயணனுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
 
கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி மதுரை திருமங்கலத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கல்லூரி மாணவிகள் இரண்டு பேர் மீது ஆசி வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் மாணவிகள் இரண்டு பேரும் பலத்த காயமடைந்தனர். 

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த சூழ்நிலையில், சங்கர நாராயணன் என்ற இளைஞரை அவரது தந்தையே மாவட்ட காவல் கண்காணிப்பாளிடம் நேரடியாக ஒப்படைத்தார். இதையடுத்து சங்கரநாராயணிடம் போலீசார் விசாரணை நடத்தி கைது செய்தனர்.

இந்த நிலையில், கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீசிய வழக்கில் கைதான சங்கர நாராயணனுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட மகளிர் அமர்வு நீதிமன்றம் நீதிபதி நாகராஜன் உத்தரவிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடிபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பாளையங்கோட்டையில் பரபரப்பு!

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் தகவல்

வெண்ணிலவே... ரேஷ்மா பசுபுலேட்டி!

ரெட் ரோஸ்... சாக்‌ஷி அகர்வால்!

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT