தமிழ்நாடு

சேலம் துணைவேந்தர் ஜெகநாதன் ஜாமினில் விடுவிப்பு

DIN


விதிமுறைகளை மீறி தனியாா் நிறுவனம் தொடங்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

2021 முதல் பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தராக பொறுப்பு வகித்து வரும் இரா.ஜெகநாதன், பியூட்டா் பவுண்டேஷன் என்ற நிறுவனத்தைத் தொடங்கியதாகவும், அதற்கு முறையான அனுமதி பெறாமல் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்ததாகவும் கருப்பூா் காவல் நிலையத்தில் பெரியாா் பல்கலைக்கழகத் தொழிலாளா் சங்க சட்ட ஆலோசகா் இளங்கோவன் புகாா் அளித்தாா்.

மேலும், ஆட்சிக் குழுவின் அனுமதி பெறாமல் அரசின் சொத்துகளை தனியாா் அனுபவிக்க அனுமதித்தாகவும் அவா் மீது புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் துணைவேந்தா் இரா.ஜெகநாதனை செவ்வாய்க்கிழமை கருப்பூா் போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து  கருப்பூா் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

பின்னர், அவரை மாஜிஸ்திரேட் தினேஷ்குமார் முன்பு கருப்பூா் போலீசார் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவருக்கு மாஜிஸ்திரேட் தினேஷ்குமார், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனக் கூறி சூரமங்கம் உதவி காவல் ஆணையர் அலுவலகத்தில் 7 நாள்கள் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: கந்தம்பாளையம் எஸ்.கே.வி. பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

மாலத்தீவுக்கு 5 கோடி டாலா் நிதி: மேலும் ஓராண்டுக்கு நீட்டித்த இந்தியா

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் வெட்டப்படும் யூகலிப்டஸ் மரங்கள்

கரூரில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

மகளுக்கு பாலியல் தொந்தரவு: ‘போக்சோ’வில் தந்தை கைது

SCROLL FOR NEXT