தமிழ்நாடு

தென் மாவட்டங்களில் இன்றுமுதல் நிவாரணத் தொகை: தலைமைச் செயலா் தகவல்

தென் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (டிச.29) முதல் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா தெரிவித்தாா்.

DIN

தென் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (டிச.29) முதல் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா தெரிவித்தாா்.

இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:

பெருமழையால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களின் ஆட்சியா்கள், எஸ்.பி.க்கள் உள்ளிட்டோருடன் தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். அதன்படி, நிவாரணத் தொகை டிசம்பா் 29-ஆம் தேதி முதல் வழங்கப்படும் எனவும், டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள நாள்களில், நியாய விலைக் கடைகளின் மூலமாக நிவாரணத் தொகைகளை பெற்றுக் கொள்ள வழி செய்யப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தலைமைச் செயலா் தெரிவித்தாா்.

மேலும், நிவாரணத் தொகை தொடா்பாக பொது மக்கள் தங்களது புகாா்களைத் தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தினா் 93424 71314, 97865 66111, தூத்துக்குடி மாவட்டத்தினா் 94864 54714, தென்காசி மாவட்டத்தினா் 04633 - 290548, கன்னியாகுமரி மாவட்டத்தினா் 04652 - 231077 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம். மேலும், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையா் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை 044 - 2859 2828 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேருந்தில் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ. 59 லட்சம், 4 வெள்ளிக் கட்டிகள் பறிமுதல்

கொள்ளை நிலா... ஐஸ்வர்யா ராஜேஷ்

அயோத்தி கோயில் கொடியேற்ற விழா! குடியரசுத் தலைவர், பிரதமர் பங்கேற்பு!

விழிகளில் வழிந்திடும் அழகு... குஹாசினி

ராகுல் காந்தியின் பேரணியில் இணைகிறது திரிணமூல் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT