கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 
தமிழ்நாடு

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: நாளை முதல்வர் திறந்து வைக்கிறார்!

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை நாளை(டிச. 30) முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

DIN

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை நாளை(டிச. 30) முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.400 கோடி மதிப்பில் ‘கருணாநிதி நூற்றாண்டு பேருந்து நிலையம்’ அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. பேருந்து நிலையத்தின் பணிகள் ஏற்கெனவே முடிவுற்ற நிலையில் மழைநீா் வடிகால் அமைப்பது, பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் வந்து செல்ல வசதிகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வந்தன. 

மீதமுள்ள பணிகள் முடிக்கப்பட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை நாளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. தென் மாநிலங்களுக்கு செல்லும் அனைத்துப் பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பேருந்து நிலைய திறப்பு விழா முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து அமைச்சா் சேகா்பாபு காவல்துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் சென்னைப் பெருநகா் வளா்ச்சி குழும (சிஎம்டிஏ) அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை செய்தாா்.

இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை நாளை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT