முகப்பு
தமிழ்நாடு

பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை

பழவேற்காடு மீனவர்கள் நாளை (டிச. 31) மற்றும் நாளை மறுநாள் (ஜன. 1) கடலுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
கோப்புப்படம்
பகிர்:

பழவேற்காடு மீனவர்கள் நாளை (டிச. 31) மற்றும் நாளை மறுநாள் (ஜன. 1) கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி ஆய்வுக்கான செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் திங்கள்கிழமை (ஜன.1) விண்ணில் ஏவப்பட உள்ளது.

விண்வெளியில் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக எக்ஸ்போசாட் (எக்ஸ்-ரே போலாரிமீட்டா் சாட்டிலைட்) என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

இந்த செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து புத்தாண்டு தினமான ஜனவரி 1-ஆம் தேதி காலை 9.10 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட பழவேற்காடு மீனவர்கள் நாளை மற்றும் நாளை  கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →