தமிழ்நாடு

டயர் வெடித்து கவிழ்ந்த ஆம்னி பேருந்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 25 பேர்!

ஆம்னி பேருந்து டயர் வெடித்து கவிழ்ந்து விபத்துள்ளானதில், அதிர்ஷ்டவசமாக  25 பேர் உயிர் தப்பினர்.

DIN

ஆம்னி பேருந்து டயர் வெடித்து கவிழ்ந்து விபத்துள்ளானதில், அதிர்ஷ்டவசமாக  25 பேர் உயிர் தப்பினர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து டயர் வெடித்து கவிழ்ந்து விபத்துள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக இரண்டு ஓட்டுநர்கள் உள்பட 25 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

பெங்களூரில் இருந்து கொடைக்கானல் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து பரமத்திவேலூர் நீதிமன்றம் அருகே வந்த போது பேருந்தின் டயர் வெடித்துள்ளது.

இதில் பேருந்து தேசிய நெடுஞ்சாலையின் தடுப்பை தாண்டி எதிர் திசையில் உள்ள சாலையில் கவிழ்ந்து. இதில் பேருந்தை ஓட்டி வந்த ஆம்பூரைச் சேர்ந்த ஓட்டுநர் பிரபாகரன் உள்ளிட்ட சிலர் லேசான காயமடைந்து வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனால் கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மாற்று பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. பரமத்திவேலூர் காவல் துறையினர் நிகழ்விடத்தில்  விசாரணை நடத்தி வருகின்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT