தமிழ்நாடு

ஆளுநரிடம் முன்வைத்த கோரிக்கைகள் என்ன?: அமைச்சர் ரகுபதி விளக்கம்

ஆளுநரிடம் முன்வைத்த கோரிக்கைகள் என்ன? என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கமளித்துள்ளார்.

DIN

ஆளுநரிடம் முன்வைத்த கோரிக்கைகள் என்ன? என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கமளித்துள்ளார்.

சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் ஸ்டாலின் இன்று சந்தித்தார். அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ரகுபதி, ராஜகண்ணப்பன் முதல்வருடன் உடன் சென்றிருந்தனர். மசோதாக்கள் ஒப்புதல் தொடர்பாக இருவரும் அமர்ந்து பேசுமாறு உச்சநீதிமன்றம் யோசனை கூறியிருந்தது. 

உச்சநீதிமன்ற அறிவுறுத்தலையடுத்து ஆளுநர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் ஸ்டாலின் சந்திதார். ஆளுநர் ஆர்.என்.ரவியுடனான சந்திப்புக்கு பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டியில், ஆளுநர் அழைப்பு விடுத்ததன் பேரில் முதல்வர் நேரில் சந்தித்தார். 

உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்தோம். 20 மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளன. 2ஆவது முறையாக அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். ஒரு மசோதா மட்டும் ஆளுநரிடம் உள்ளது. 

முன்னாள் அமைச்சர்கள் வீரமணி, விஜயபாஸ்கர் மீதான வழக்குகளை விசாரிக்க அனுமதி தர கோரினோம். சிறைக் கைதிகள் முன்விடுதலை தொடர்பாக 49 கோப்புகள் ஆளுநர் ஒப்புதலுக்காக உள்ளன. நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் மசோதாக்கள் பரிசீலிக்கப்பட வேண்டும். தமிழக ஆளுநருடனான முதல்வரின் சந்திப்பு நன்றாக இருந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உலக உறுப்பு தான தின விழிப்புணா்வு

வாழப்பாடி அருகே இரு பைக்குகள் நேருக்குநோ் மோதல்: மாணவா் உள்பட இருவா் உயிரிழப்பு

சேலம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைப்பு: இளைஞரிடம் விசாரணை

தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம்: நினைவுச் சின்னத்தில் தமிழக அரசு மரியாதை

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT