தமிழ்நாடு

பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸுக்கு நிதி ஒதுக்கவில்லை: தமிழக எம்.பி.க்கள் போராட்டம்

DIN

மத்திய பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிப்பு கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியானது. அதைத் தொடா்ந்து மதுரை தோப்பூரில் அதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டு, கடந்த 2019-ஆம் ஆண்டு பிரதமா் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கட்டுமானப் பணிகளுக்கு தேவையான நிதிகளை ஒதுக்குவதில் தாமதம் நீட்டித்து வருகின்றது.

இந்நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்ட நிகழ்வாண்டிற்கான பட்ஜெட்டிலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கான நிதி ஒதுக்கவில்லை.

இதனை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பு தமிழக எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த், பி.ஆர்.நடராஜன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றம் புதிது படத்தின் தொடக்க விழா - புகைப்படங்கள்

தாயுமானவள்! அமலா பால்..

ஹரா படத்தின் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

அண்ணாமலையை கைது செய்ய உத்தரவு? ஆளுநர் மாளிகை விளக்கம்

திருமணம் எப்போது? - ராகுல் காந்தி பதில்

SCROLL FOR NEXT