தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணையில் துணைக் குழு இன்று ஆய்வு

DIN

கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர் வள ஆதார துணைக் குழுவினர் புதன்கிழமை ஆய்வு நடத்துகின்றனர்.

முல்லைப் பெரியாறு அணையில் பருவநிலை மாற்றங்களின் போது அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய உச்சநீதிமன்றம் ஆய்வுக்குழுக்களை நியமித்தது.

அதன் அடிப்படையில் புதன் கிழமை மத்திய கண்காணிப்பு குழுவினர் அணையில் ஆய்வு நடத்துகின்றனர். குழுவில் மத்திய நீர்வளக்குழு செயற்பொறியாளர் சதீஷ்குமார், தமிழக அரசு பிரதிநிதிகளாக அணையின் செயற்பொறியாளர் ஜே.சாம் இர்வின், கோட்டப் பொறியாளர் த.குமார், கேரள அரசு பிரதிநிதிகள் கட்டப்பனை நீர் வளத்துறை செயற் பொறியாளர் ஹரிக்குமார், உதவி பொறியாளர் பிரஸீத் பங்கேற்கின்றனர்.

துணைக்குழு தலைவராக இருந்த நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக சதீஷ்குமார் தலைமையில் மத்திய துணைக் குழுவினர் ஆய்வு நடத்துகின்றனர்.

அணை நிலவரம்

புதன்கிழமை நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 127.75 அடி உயரமாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி). அணையில் நீர் இருப்பு 4,212 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 164.86 கன அடியாகவும், அணையிலிருந்து தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1,055 கன அடியாகவும் இருந்தது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணை, தேக்கடி ஏரி பகுதிகளில் மழை பொழிவு இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

SCROLL FOR NEXT