தமிழ்நாடு

சென்னை உள்பட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை!

சென்னை உள்பட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

DIN

சென்னை உள்பட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. 

வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில்,  நன்னிலம், குடவாசல், குளிக்கரை, மாங்குடி, சன்னாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும், திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

இதனால் திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடு துறை மாவட்டத்தில் தொடர் மழையால் 2,500 ஏக்கர் நிலங்கள் மழைநீரில் மூழ்கின.

நாகையிலும் தொடர் மழை பெய்ததால், 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது சொகுசு காா் மோதி விபத்து: இருவா் பலத்த காயம்

பைக்கிலிருந்து தவறி விழுந்த மீனவா் உயிரிழப்பு

உதகையில் கடும் குளிா்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தேவாலா பகுதியில் கனமழை: வீடு சேதம்

வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்

SCROLL FOR NEXT