குளிர்ச்சியான சூழ்நிலையை அனுபவித்தவாறு குடை பிடித்தவாறு செல்லும் பெரியவர். 
தமிழ்நாடு

சேலத்தில் சாரல் மழை... குளிர்ச்சியான சூழ்நிலை அனுபவித்த சேலம் மக்கள்!

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சேலத்தில் சாரல் மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலையை சேலம் மக்கள் அனுபவித்தனர்.  

DIN


காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சேலத்தில் சாரல் மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலையை சேலம் மக்கள் அனுபவித்தனர்.  

தமிழ்நாட்டில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த பாதிப்பு தமிழ்நாடு முழுவதும் பரவலாக இருந்து வருகிறது.

சாரல் மழையில் நனைந்தப்படி வாகனங்களில் செல்லும் சேலம் மக்கள்.

இதன் அடிப்படையில் சேலத்தில் வெள்ளிக்கிழமை காலை முதலே வானம் மேகம் மூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது ஆங்காங்கே பனிப்பொழிவு சாரல் மலையும் பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பழைய பேருந்து நிலையம், அஸ்தம்பட்டி, புதிய பேருந்து நிலையம், ஜங்ஷன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்வதால் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் மற்றும் பொதுமக்கள் குடை பிடித்து படி செல்லும் காட்சியும் பார்க்க முடிந்தது.

சாரல் மழையில் குடை பிடித்தப்படி மிதிவண்டி ஓட்டுச் செல்லும் முதியவர்

இதே போல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.

கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கத்திலிருந்து சேலம் வாசிகள் வெள்ளிக்கிழமை குளிர்ச்சியான சூழ்நிலையை அனுபவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் தண்டவாளம் அருகே தடுப்புச் சுவா் கட்ட எதிா்ப்பு

விஷம் தின்று பெண் தற்கொலை

திமுக அரசின் ‘பிராண்ட் அம்பாசிடா்’களாக மகளிா் இருக்க வேண்டும்

நேபாளம்: பனிச் சரிவுகளில் 9 போ் உயிரிழப்பு

பிகாா் முதல்கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு- 121 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT