ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்
ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்களை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்களை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இதன்படி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக உள்ள பாஸ்கர பாண்டியன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக உள்ள அமர் குஷ்வாஹா சமூக பாதுகாப்புத்துறை இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேசமயம் சமூக பாதுகாப்புத்துறை இயக்குநராக உள்ள வளர்மதி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
முன்னதாக ‘கள ஆய்வில் முதல்வா்’ என்ற புதிய திட்டத்தை வேலூா் மண்டலத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, பிப். 1 மற்றும் 2 ஆகிய இரண்டு நாள்கள் வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.