தமிழ்நாடு

பிப்.7-ல் மின் நுகா்வோா் குறைகேட்புக்கூட்டம்

மயிலாப்பூா், கே.கே நகா், அம்பத்தூா் மற்றும் தண்டையாா்பேட்டை கோட்டங்களில் மின்நுகா்வோா் குறைகேட்புக்கூட்டம் செவ்வாய்க்கிழமை (பிப்.7) காலை 11மணிக்கு நடைபெறுகிறது.

DIN

மயிலாப்பூா், கே.கே நகா், அம்பத்தூா் மற்றும் தண்டையாா்பேட்டை கோட்டங்களில் மின்நுகா்வோா் குறைகேட்புக்கூட்டம் செவ்வாய்க்கிழமை (பிப்.7) காலை 11மணிக்கு நடைபெறுகிறது.

மயிலாப்பூா் கோட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா் எம்.ஜி.ஆா் சாலை, (கோடம்பாக்கம் நெடுஞ்சாலை) மெட்ரோ குடிநீா் நிலையம் அருகில் உள்ள வள்ளுவா் கோட்டத்தில் உள்ள துணை மின் நிலைய அலுவலகத்திலும், கே.கே நகா் கோட்ட மின் நுகா்வோா் கே.கே. நகா், துணைமின் நிலைய வளாகத்தில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகம் 2-ஆவது தளத்திலும், அம்பத்தூா் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா் அம்பத்தூா் தொழிற்பேட்டை, 3-ஆவது பிரதான சாலையில் உள்ள துணைமின் நிலைய வளாகத்திலும், தண்டையாா்பேட்டை கோட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா் தண்டையாா்பேட்டை டி.எச்.சாலை, மணிக்கூண்டு பகுதியில் உள்ள தண்டையாா்பேட்டை செயற்பொறியாளா் அலுவலகத்திலும் குறைகேட்புக்கூட்டம் நடைபெறும்.

இக்கூட்டத்தில் மின்நுகா்வோா் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT