கோப்புப் படம் 
தமிழ்நாடு

அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நடுநிலை தவறியுள்ளார்: ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டு

அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நடுநிலை தவறியுள்ளார் என்று ஓபிஎஸ் தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

DIN

அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நடுநிலை தவறியுள்ளார் என்று ஓபிஎஸ் தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் ஆகியோர் கூட்டாக இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அதிமுகவில் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பியது அதிர்ச்சியும், வேதனையும் தருகிறது. பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் பெயரை குறிப்பிடாமல், பழனிசாமி தரப்பு வேட்பாளர் பெயரை மட்டும் குறிப்பிட்டுள்ளனர். 

ஏற்கெனவே அதிமுக சார்பில் செந்தில்முருகன் வேட்பு மனுத் தாக்கல் செய்த நிலையில் அவர் பெயரை குறிப்பிடவில்லை. செந்தில் முருகன் பெயரை குறிப்பிடாமல் வேட்புமனு தாக்கல் செய்யாத தென்னரசு பெயர் மட்டுமே படிவத்தில் உள்ளது. வேறு வேட்பாளரை முன் நிறுத்துவது குறித்து எந்த ஒரு வாய்ப்பும் வழங்கவில்லை. அதிகாரபூர்வ வேட்பாளரை பொதுக்குழுதான் முடிவு செய்ய வேண்டும். 

ஆனால் தமிழ்மகன் உசேன் ஒருவரை அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கிறார். அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நடுநிலை தவறியுள்ளார். பொதுக்குழு உறுப்பினர்களுக்கு யார், யார் வேட்பாளராக இருக்கின்றனர் என தெரிவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவது சட்டத்திற்கும், நீதிக்கும் புறம்பான செயல். இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முன்னாள் போட்டியாளர்கள்!

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

SCROLL FOR NEXT