தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு: ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் போட்டியிலிருந்து வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவார் என ஓபிஎஸ் தரப்பினர் அறிவித்துள்ளனர். 

DIN

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் போட்டியிலிருந்து வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவார் என ஓபிஎஸ் தரப்பினர் அறிவித்துள்ளனர். 

ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேல்முருகனை வேட்பாளாராக ஓபிஎஸ் அறிவித்திருந்தார். அவர் கடந்த வாரம் தனது வேட்புமனுவைத் தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் போட்டியிலிருந்து வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவார் என ஓபிஎஸ் தரப்பினர் அறிவித்துள்ளனர். 

சென்னையில் ஓபிஎஸ் இல்லத்தில் இன்று நடந்த ஆலோசனைக்குப் பின்னர் அவரது ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன் இதனை அறிவித்தார். மேலும் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இரட்டை இலை முடக்கப்படக் கூடாது என்பதே எங்களது நிலைப்பாடு. அதன் வெற்றிக்காக பாடுபடுவோம். ஈரோடு கிழக்கில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் வேட்பாளருக்கு எங்களது ஆதரவு . 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் போட்டியிலிருந்து வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவார். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்காக ஈரோட்டில் வாக்கு சேகரிப்போம். இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டனர். பழனிசாமி தரப்பில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடும் நிலையில் ஓபிஎஸ் தரப்பு வாபஸ் பெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT