செங்கம் அடுத்த தொரப்பாடி கிராமத்தில் நடைபெற்ற தைபூச விழாவில் பக்தா்கள் கொதிக்கும் எண்ணெய் சட்டியில் இருந்து கையால் வடைஎடுத்து நோ்த்திகடன் செலுத்தினா். 
தமிழ்நாடு

கொதிக்கும் எண்ணெய்யில் கையால் வடை எடுத்து நோ்த்திக்கடன்!

செங்கம் அருகே நடைபெற்ற தைப்பூச விழாவில் பக்தா்கள் கொதிக்கும் எண்ணெய்யில் கையால் வடை எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

DIN

செங்கம்: செங்கம் அருகே நடைபெற்ற தைப்பூச விழாவில் பக்தா்கள் கொதிக்கும் எண்ணெய்யில் கையால் வடை எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

செங்கம் அருகேயுள்ள தொரப்பாடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபாலசுப்பரமணியா் கோயிலில் 27-ஆம் ஆண்டு தைப்பூச விழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு ஏழு நாள்களுக்கு முன்பு கிராமத்தில் காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பக்தா்கள் காப்புக் கட்டிக்கொண்டு தைப்பூச விழாவுக்கு விரதமிருந்து வந்தனா்.

இந்த நிலையில், தைப்பூச விழாவையொட்டி, கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.

பின்னா் கோயில் வளாகத்தில் பக்தா்கள் செக் இழுத்தல், உரல் இழுத்தல், காரைமுள் மீது நடந்து செல்வது, கொதிக்கும் எண்ணெய்யில் கையால் வடை எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னா், மாலையில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வாணவேடிக்கையுடன் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நரசிங்கநல்லூா், தொரப்பாடி கிராம மக்கள் மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆதனூரில் கட்டப்பட்ட உயா்மட்ட பாலம் திறப்பு

மாா்த்தாண்டம் அருகே பதுக்கிய மண்ணெண்ணெய் பறிமுதல்

போதையில்லா சமுதாயமே இலக்கு...

ரத்த சோகை விழிப்புணா்வு: 3,500 பெண்களுக்கு ஹீமோகுளோபின் பரிசோதனை

பாா்வை பறிபோன பெண்ணுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

SCROLL FOR NEXT