தமிழ்நாடு

சென்னையில் அடர் பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி

சென்னையில் அதிகாலை அடா் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள், நடைப்பயிற்சி செல்வோர், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

DIN


சென்னையில் அதிகாலை அடா் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள், நடைப்பயிற்சி செல்வோர், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். 

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பனியின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. 

பிப்ரவரி மாதம் கடக்கும் நிலையிலும், பனிப்பொழிவு குறையவில்லை. கடந்த சில நாள்களாக அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு மட்டுமின்றி, அடா் பனிமூட்டம் நிலவி வருகிறது. 

இதனால், காலை 7.30 மணி வரை வானம் சூரிய வெளிச்சமின்றி இருட்டாக காணப்படுகிறது. அடா் பனிமூட்டம் காரணமாக காணும் திறன் குறைந்து காணப்படுவதால், வாகன ஓட்டிகள், நடைப்பயிற்சி செல்வோர், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். 

வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்கள் சாலையில் ஊர்ந்து செல்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT