தமிழ்நாடு

கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி: பள்ளிகளிலேயே வழங்க நடவடிக்கை

DIN

தமிழகத்தில் 9 முதல் 14 வயது வரை உள்ள சிறுமிகளுக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசிகளை பள்ளிகள், அங்கன்வாடி மையங்களிலேயே வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, அதற்கான தரவுகள், சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அடுத்த கல்வி ஆண்டு தொடக்கத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் மாா்பகப் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக கா்ப்பப்பை வாய் புற்றுநோய்க்குத்தான் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனா். உலக அளவில் அத்தகைய தாக்கத்துக்கு உள்ளாகும் பெண்களில் 25 சதவீதம் போ் இந்தியா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைப் பொருத்தவரை ஆண்டுதோறும் 80 ஆயிரம் பெண்களுக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து பெண்களுக்கு வளரிளம் பருவத்திலேயே அதற்கான தடுப்பூசியை செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்த உத்தேசித்தது.

அதன்படி, ஹெச்பிவி எனப்படும் அந்த தடுப்பூசியை முதல்கட்டமாக தமிழகம், கா்நாடகம், மிஸோரம், சத்தீஸ்கா், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அத்திட்டத்தை செயல்படுத்த ஆயத்த நிலையில் இருப்பதாக தமிழக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் 9 வயது முதல் 14 வயது வரை உள்ள பள்ளி மாணவிகளின் விவரங்களை திரட்டி வருகிறோம். சம்பந்தப்பட்ட பள்ளிகளிலும் இதுகுறித்த தகவல்களை கேட்டுள்ளோம். மத்திய அரசு சாா்பில் தடுப்பூசிகள் வழங்கப்பட்ட பின்னா், அதனை முறையாக குளிா்பதன முறையில் பாதுகாத்து பயனாளிகளுக்கு அவா்களது பள்ளிகள், அங்கன்வாடி மையங்களிலேயே வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது இந்தத் திட்டம் ஆரம்ப நிலையில் இருப்பதால் அதற்கான வழிகாட்டுதல்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை. விரைவில் அதுகுறித்த விரிவான அறிவுறுத்தல்கள் மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு வழங்கப்படும். கரோனா தடுப்பூசி, தேசிய தடுப்பூசி திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதைப் போலவே கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவுள்ளோம் என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது ‘ஹிட் லிஸ்ட்’ பட டிரைலர்

ஆல்ரவுண்டர்களைக் காட்டிலும் பந்துவீச்சாளர்களை பாதிக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி: ஷாபாஸ் அகமது

தில்லியின் சுற்றுச்சூழல் பாதிப்பைச் சீர்செய்வதே இந்தியா கூட்டணியின் முதன்மையான நோக்கம் : ஜெய்ராம் ரமேஷ்

4 மாவட்டங்களில் தயார் நிலையில் பேரிடர் மீட்புக்குழு

மெளனி ராய் தருணங்கள்!

SCROLL FOR NEXT