தமிழ்நாடு

அரசியல் எதிரிகளுக்காக சிபிஐ, வருவாய்த் துறை! பிபிசியில் சோதனை: ஸ்டாலின் கண்டனம்!

அரசியல் எதிரிகளை குறிவைக்க சிபிஐ, வருமான வரித் துறை போன்ற மத்திய அமைப்புகளை கருவியாகப் பயன்படுத்தப்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

DIN


அரசியல் எதிரிகளை குறிவைக்க சிபிஐ, வருமான வரித் துறை போன்ற மத்திய அமைப்புகளை கருவியாகப் பயன்படுத்தப்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, துடிப்பான ஜனநாயகத்துக்கு வெளிப்படையான, சுதந்திரமான நிறுவனங்கள் இன்றியமையாதவை. எனினும் பாஜக தலைமையிலான ஆட்சியில், நாட்டின் மதிப்பு மிக்க நிறுவனங்கள் முற்றிலும் சுதந்திரம் இழந்துள்ளன.

அரசியல் எதிர்களை இலக்காக வைத்து சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை போன்றவை கருவிகளாக  பயன்படுத்தப்படுகின்றன. அரசியல் எதிர்களை குறிவைக்கும் பட்டியலில் பிபிசியில் நடத்தப்படும் வருமான வரித் துறை சோதனையும் சேர்ந்துள்ளது. 

இந்திய ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் அழிவுக்கு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துபவர்களே காரணம். இதனை அமைதியாக கண்காணித்து வரும் மக்கள், வருகின்ற தேர்தலில் தகுந்த பாடம் வழங்குவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

SCROLL FOR NEXT