தமிழ்நாடு

கரூர்: காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் பலி

கரூரில் காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

கரூரில் காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கரூரில் மாயனூர் காவிரி கதவணை அருகே ஆற்றில் மூழ்கிய ஒரு மாணவியை காப்பாற்ற முயன்ற மற்ற 3 மாணவிகளும் ஆற்றில் மூழ்கினர். 

உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்து 4 பேரையும் தீவிரமாகத் தேடிய நிலையில் 4 பேரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். 

விராலிமலை ஒன்றியம் கோங்குடிபட்டி ஊராட்சி புதுப்பட்டி அரசு நடுநிலை பள்ளி மாணவிகள்.

இவர்கள் நால்வரும் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் கோங்குடிபட்டி ஊராட்சி பிலிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் தமிழரசி, சோபியா, இனியா, லாவண்யா என தெரிய வந்துள்ளது. 

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

98.42 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

SCROLL FOR NEXT