தமிழ்நாடு

சந்திரயான்-3 ஆரம்ப கட்ட சோதனை வெற்றி: இஸ்ரோ

இந்தியாவின் நிலவு பயணத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-3 விண்கலமானது பெங்களூருவில் உள்ள யுஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

DIN

சென்னை: இந்தியாவின் நிலவு பயணத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-3 விண்கலமானது பெங்களூருவிலுள்ள யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த சோதனையானது கடந்த ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை நடைபெற்றதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்தது.

மின்காந்த குறுக்கீடு மற்றும் மின்காந்த இணக்கத்தன்மை சோதனையானது, விண்வெளி சூழலில் செயற்கைக்கோள் துணை அமைப்புகளின் செயல்பாடு மற்றும் எதிர்பார்க்கப்படும் மின்காந்த நிலைகளுடன் அவற்றின் இணக்கத்தன்மையை உறுதிப்படுத்தும் பணிகளுக்காக இது நடத்தப்பட்டது.

இந்த சோதனையானது செயற்கைக்கோள்களை செயல்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல் என இஸ்ரோ கூறியுள்ளது. அதே வேளையில் சந்திரயான்-3 இன்டர்பிளானட்டரி மிஷன் உந்துவிசை, லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று முக்கிய தொகுதிகளை கொண்டுள்ளது.

இந்த பணி சிக்கலானதும், மேலும் தொகுதிகளுக்கு இடையே உள்ள ரேடியோ-அதிர்வெண் (ஆர் எஃப்) தொடர்பு இணைப்புகளை நிறுவுவதற்கான பணியை மேற்கொள்ளும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரயான் 2 இல் ஏற்பட்ட பிரச்னைகள் இதில் இருக்காது என்றும், சந்திராயன் 3 மிகவும் வலிமையானதாக உருவாக்கி இருப்பதாகவும், விண்கலத்தில் ஒரு கருவி பழுதடைந்தால் மற்றொரு கருவி அந்த பணியை முன்னெடுத்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அமைப்புகளின் செயல்திறன் திருப்திகரமாக இருப்பதாக இந்திய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT