முகப்பு
தமிழ்நாடு

தருமபுரியில் வட்டாட்சியர் மரணம்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

மாரடைப்பால் மரணமடைந்த வட்டாட்சியர் அதியமான் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:33 AM
தருமபுரியில் வட்டாட்சியர் மரணம்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
பகிர்:

மாரடைப்பால் மரணமடைந்த வட்டாட்சியர் அதியமான் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான இறகுப்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடிக் கொண்டிருந்தபோது வட்டாட்சியர்  அதியமான் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இது குறித்த செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், வட்டாட்சியர் அதியமான் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அரசு ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
 
முழு கட்டுரையைப் படிக்க →