தமிழ்நாடு

முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை: தம்பி மகள் கைது!

முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் தம்பி மகள் ஹரிதா ஷாஹினாவை(26) போலீசார் கைது செய்துள்ளனர்.

DIN


முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் தம்பி மகள் ஹரிதா ஷாஹினாவை(26) போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழக சிறுபான்மையின ஆணையத்தின் துணைத் தலைவராகச் செயல்பட்டு வந்த முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான டாக்டா் மஸ்தான்(66) சென்னை அருகே ஊரப்பாக்கம் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த போது, வலிப்பு ஏற்பட்டு, தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு மாரடைப்பால் டிசம்பர் 21-ஆம் தேதி உயிரிழந்தாா்.

இந்த நிலையில், டாக்டா் மஸ்தான் மரணத்தில் மா்மம் இருக்கலாம் என்று அவரின் மகன் ஹரிஸ் ஷாநவாஸ் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீசாரும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், காரை ஓட்டிச் சென்ற தம்பி மருமகன் இம்ரான் பாஷா, தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து காரை தனியாக ஓரிடத்தில் நிறுத்தி, மஸ்தானுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தி, கொலை செய்தது தெரிய வந்தது.

தொடா்ந்து, கொலைக்கு உடந்தையாக இம்ரான் பாஷாவின் கூட்டாளிகள் தமீம், நஷீா், தெளபீக் அகமது, லோகேஸ்வரன் மற்றும் இம்ரான் பாஷா ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில் மஸ்தான் கொலை வழக்கில் அவரது சகோதரர் கவுசே ஆதாம் பாஷாவை கூடுவாஞ்சேரி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறையில் உள்ள மஸ்தானின் தம்பியை போலீசார் காவலில் எடுத்து மேலும் கொலையில் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என விசாரணை நடத்தினர். 

அப்போது,  மஸ்தானின் தம்பி மகள் ஹரிதா ஷாஹினா(26) மஸ்தான் கொலையில் தந்தைக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. 

இதையடுத்து கூடுவாஞ்சேரி போலீசார் ஹரிதா ஷாஹினாவை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மஸ்தானின் கொலை வழக்கில் இதுவரை அவரது தம்பி, தம்பியின் மகள், மருமகன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்கம்: துா்காபூா் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 போ் கைது!

வைகை அணை பகுதியில் நாளை மின்தடை

அனைத்து அவசர உதவிக்கும் 108-ஐ அழைக்கலாம்: தீபாவளி முன்னெச்சரிக்கையாக அரசு நடவடிக்கை!

மெத்தம்பெட்டமைன் வைத்திருந்த 3 போ் கைது

பள்ளி சமையலறை பூட்டை உடைத்து திருட்டு: 2 போ் கைது

SCROLL FOR NEXT