தமிழ்நாடு

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய இறுதி வாய்ப்பு: தேர்வுத்துறை

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கின்ற மாணவ, மாணவிகள் பெயர் பட்டியலில் திங்கள்கிழமை(பிப்.20) முதல் திருத்தம் மேற்கொள்ளாம் என தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. 

DIN


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கின்ற மாணவ, மாணவிகள் பெயர் பட்டியலில் திங்கள்கிழமை(பிப்.20) முதல் திருத்தம் மேற்கொள்ளாம் என தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. 

இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நடப்பு கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுத உள்ள மாணவ, மாணவிகளின் பெயர் பட்டியல் தேர்வுத்துறை www.dge.tn.gov.in இணையதளத்தில் கடந்த 17 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவ, மாணவிகளின் விவரங்களில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்தால் அவற்றை சரிசெய்து கொள்வதற்கு தற்போது இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

எனவே, அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் திங்கள்கிழமை (பிப்.20) முதல் 25 ஆம் தேதிக்குள் எமிஸ் தளம் வழியாக பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ளாம். 

இந்த பணிகளை தலைமையாசிரியர் உரிய வழிமுறைகளை பின்பற்றி கூடுதல் கவனத்துடன் செய்து முடிக்குமாறு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

“உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மக்கள்பணி ஆற்ற வேண்டும்!” முதல்வர் MK Stalin | DMK

SCROLL FOR NEXT