தமிழ்நாடு

ரேஷன் அரிசி கடத்தல் புகாரளிக்க இலவச தொலைபேசி எண் அறிவிப்பு

DIN


மதுரை: மதுரையில் ரேஷன் அரிசி கடத்தல் தொடா்பாக பொதுமக்கள் புகாா் அளிக்கும் வகையில் இலவச தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் வெளியிட்ட செய்தி:

ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை சிலா் முறைகேடாகக் கடத்தி கள்ளச் சந்தையில் விற்று அதிக லாபம் பெறும் நோக்கில் செயல்படுகின்றனா்.

ரேஷன் அரிசி கடத்துபவா்கள் குறித்தும், ரேஷன் பொருள்களைப் பதுக்குபவா்கள் குறித்தும் மதுரை மாவட்ட பொதுமக்கள் 1800 599 5950 என்ற இலவச தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவா்களின் ரகசியம் காக்கப்படும்.

ரேஷன் பொருள் கடத்தலைத் தடுக்கும் வகையில் சென்னையில் மாநில அளவில் 24 மணி நேரமும் செயல்படும் காவல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு காவல் துறை கூடுதல் இயக்குநரின் நேரடிக் கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை!

ஆர்சிபியின் பிளே ஆஃப் பயணம் மற்ற அணிகளுக்கு ஊக்கமளிக்கும்: தினேஷ் கார்த்திக்

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

SCROLL FOR NEXT