கிராமங்களை நோக்கி நாம் செல்ல வேண்டும்: கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் கொடியை நகரங்களில் மட்டுமின்றி, அனைத்து கிராமங்களிலும் ஏற்ற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கொடியை நகரங்களில் மட்டுமின்றி, அனைத்து கிராமங்களிலும் ஏற்ற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பிப்ரவரி 21 ஆம் தேதி நம் கட்சியின் 6 ஆம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடும் விதமாக, கட்சி வளர்ச்சிப்பணியாற்ற கிராமங்களை நோக்கி நாம் செல்ல வேண்டும்.
கட்சியினர் அனைவரும் மக்கள் நீதி மய்யம் கொடியை பிப்ரவரி 21 ஆம் தேதி நகரங்களில் மட்டுமின்றி, அனைத்து கிராமங்களிலும் ஏற்ற வேண்டும்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது
அழகான வெண் மேகக்கூட்டங்கள் போல, நம் மய்யக் கொடிகள் தமிழ்நாடு முழுவதும் பறக்க வழிவகுக்க வேண்டும்.
நம் கட்சி, நம் கொடி என்ற உணர்வோடு மக்கள் நிதி மய்யத்தினர் அனைவரும் தங்கள் பகுதியில் மாற்று கட்சியினர் கொடிகளைவிட அதிகமான இடங்களில் நம் கொடியை பறக்க விடுவதோடு தங்கள் இல்லங்களிலும் கொடி ஏற்றி நம் கட்சியின் ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.