முகப்பு
தமிழ்நாடு

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும் இருவர் கைது!

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கு தொடர்பாக மேலும் இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:34 AM
கொள்ளையடிக்கப்பட்ட ஏடிஎம்
பகிர்:

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கு தொடர்பாக மேலும் இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் கோலாரைச் சேர்ந்த குர்தீப் பாஷா, அஹாப் உசைன் ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

ஏற்கெனவே ஆரிப், ஆசத் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் இருவரை தனிப்படையினர் கைது செய்துள்ளனர். 

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூா் பகுதிகளில் இயங்கி வந்த 4 ஏடிஎம் மையங்களில் கடந்த 12-ஆம் தேதி அதிகாலை புகுந்த மா்ம கும்பல், பணம் வழங்கும் இயந்திரங்களை உடைத்து ரூ.75 லட்சத்தை திருடிச் சென்றது.

Advertisement

இதில் ஈடுபட்டவா்களைப் பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஆந்திரம், கா்நாடகம், ஹரியாணா மாநிலங்களில் தனிப்படை அதிகாரிகள் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், ஏடிஎம் கொள்ளையில் தொடர்புடைய இருவரை நேற்று இரவு காவல் துறையினர் ஹரியாணாவில் கடந்த 17ஆம் தேதி கைது செய்தனர். அவர்கள் இருவரையும் திருவண்ணாமலை நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். 

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை தனிப்படையினர் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் கோலாரைச் சேர்ந்த குர்தீப் பாஷா, அஹாப் உசைன் ஆகிய இருவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments