தமிழ்நாடு

சற்றுநேரத்தில் தீர்ப்பு! அதிமுக அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்னும் சற்றுநேரத்தில் தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில், அதிமுக அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

DIN

அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்னும் சற்றுநேரத்தில் தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில், அதிமுக அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதிமுகவில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஜூலை 11-ஆம் தேதி கூடிய பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வு தீா்ப்பு அளித்ததை எதிா்த்து, ஓ.பன்னீா்செல்வம் தரப்பு பல்வேறு மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோா் அமா்வு முன்பு மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீா்செல்வம் ஆகிய இரு தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும், இரு தரப்பினரும் எழுத்துபூா்வ விளக்கத்தையும் தாக்கல் செய்தனா். அனைத்துத் தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிமன்றம் தீா்ப்பை ஒத்திவைத்தது.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு விவகாரத்தின் தீா்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் வெளியிடுகிறது.

இதனை தொடர்ந்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கடந்தாண்டு அதிமுக பொதுக்குழு நடைபெற்ற போது இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக அலுவலகத்தில் மோதிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது; விளைவுகளை சந்திக்க தயார்! மோடி மறைமுக பதிலடி!

யுபிஐ எப்போதும் இலவசமாகவே கிடைக்கும் என நான் கூறவில்லை: சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கம்

தங்கம் வென்றார் அன்னு ராணி!

இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள்! இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

டிரம்ப் வரி எதிரொலி: இந்திய பங்குச் சந்தை கடும் சரிவு!

SCROLL FOR NEXT