தமிழ்நாடு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொடிப்பட்ட வீதி உலா!

DIN

திருச்செந்தூர்:  திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்  மாசித்திருவிழா கொடிப்பட்ட வீதி உலா நடைபெற்றது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித்திருவிழாவானது நாளை (பிப். 25) அதிகாலை 5 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. கொடியேற்றத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை கொடிப்பட்ட வீதி உலா நடைபெற்றது.

14 ஊர் செங்குந்தர் முதலியார் உறவின்முறை 12-ஆம் திருவிழா மண்டகப்படி மண்டபத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட கொடிப்பட்டத்தை 2-ம் படி செப்பு ஸ்தலத்தார் கிருஷ்ணமூர்த்தி தீட்சிதர் யானை மீது வைத்து கையில் ஏந்தியவாறு வீதி உலா வந்து திருக்கோயில் சேர்ந்தது.

நிகழ்ச்சியில் திருக்கோயில் பணியாளர்கள், 14 ஊர் செங்குந்தர் முதலியார் உறவின்முறை அபிவிருத்தி சங்க உப தலைவர் பொ. மாரிமுத்து, நாட்டு தலைவர் வெ.ச. மாரிமுத்து, திரிசுதந்திர பிராமண சமுதாயத்தினர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியலுக்கும் எங்களுக்குமான உறவு சிறுவயதிலிருந்தே தொடங்கிவிட்டது: ராகுல் பகிர்ந்த விடியோ

தேவ கௌடாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

அமுதூற்றினை ஒத்த இதழ்கள்! நிலவூறித் ததும்பும் விழிகள்!

கடையநல்லூரில் இரு தரப்பினர் மோதல், சாலை மறியல்

SCROLL FOR NEXT