ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்!
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தாயார் மறைவுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி கே. பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் தாயார் மறைவுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி கே. பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தாயாரை இழந்து வாடும் பன்னீர்செல்வம் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக நேற்றிரவு காலமானார். அவரின் மறைவுக்கு அரசியல் கட்சியைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.